திருவாய் மொழி இரண்டாம் பத்து

2901 வாயுந்திரையுகளும் கானல்மடநாராய்,
ஆயும் அமருலகும்துஞ்சிலும் நீதுஞ்சாயால்,
நோயும் பயலைமையும் மீதூரவெம்மேபோல்,
நீயும்திருமாலால் நெஞ்சம்கோட் பட்டாயே. 1.1

2902 கோட்பட்டசிந்தையாய்க் கூர்வாய அன்றிலே,
சேட்பட்ட யாமங்கள் சேரா திரங்குதியால்,
ஆட்பட்ட எம்மேபோல் நீயும் அரவணையான்,
தாட்பட்ட தண்டுழாய்த் தாமம்கா முற்றாயே. 1.2

2903 காமுற்ற கையறவோ டெல்லே இராப்பகல்,
நீமுற்றக் கண்டுயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்
தீமுற்றத் தென்னிலங்கை யூட்டினான் தாள்நயந்த,
யாமுற்ற துற்றாயோ வாழி கனைகடலே. 1.3

2904 கடலும்மலையும்விசும்பும் துழாயெம்போல்,
சுடர்க்கொளிராப்பகல் துஞ்சாயால்தண்வாடாய்,
அடல்கொள்படையாழி அம்மானைக்காண்பான்நீ,
உடலம்நோயுற்றாயோ வூழிதோறூழியே. 1.4

2905 ஊழிதோறூழி யுலகுக்குநீர்க்கொண்டு,
தோழியரும்யாமும்போல் நீராய்நெகிழ்கின்ற,
வாழியவானமே, நீயும fமதுசூதன்,
பாழிமையிற் பட்டவன்கட்பாசத்தால்நைவாயே. 1.5

2906 நைவாய எம்மேபோல் நாண்மதியே நீயிந்நாள்,
மைவான் இருளகற்றாய் மாழாந்துதேம்புதியால்,
ஐவாய் அரவணைமே லாழிப்பெருமானார்,
மெய்வாசகம்கேட்டுன் மெய்ந்நீர்மைதோற்றாயே. 1.6

2907 தோற்றோம்மடநெஞ்ச மெம்பெருமான்நாரணற்குஎம்
ஆற்றாமைசொல்லி யழுவோமை நீநடுவே,
வேற்றோர்வகையில் கொடிதாயெனையூழி,
மாற்றாண்மைநிற்றியோ வாழிகனையிருளே. 1.7

2908 இருளின்திணிவண்ணம் மாநீர்க்கழியே,போய்,
மருளுற்றிராப்பகல் துஞ்சிலும்நீதுஞ்சாயால்,
உருளும்சகடம் உதைத்தபெருமானார்,
அருளின்பெருநசையா லாழாந்துநொந்தாயே. 1.8

2909 நொந்தாராக்காதல்நோய் மெல்லாவியுள்ளுலர்த்த,
நந்தாவிளக்கமே நீயுமளியத்தாய்,
செந்தாமரைத்தடங்கண் செங்கனிவாயெம்பெருமான்,
அந்தாமத்தண்டுழா யாசையால்வேவாயே. 1.9

2910 வேவாராவேட்கைநோய் மெல்லாவியுள்ளுலர்த்த,
ஓவாதிராப்பக லுன்பாலேவீழ்த்தொழிந்தாய்,
மாவாய்பிளந்து மருதிடைபோய்மண்ணளந்த,
மூவா முதல்வா இனியெம்மைச்சோரேலே. 1.10

2911 சோராதவெப்பொருட்கு ஆதியாம் சோதிக்கே,
ஆராதகாதல் குருகூர்ச்சடகோபன்,
ஓராயிரம்சொன்ன அவற்றுளிவைப்பத்தும்,
சோரார்விடார்க்கண்டீர் வைகுந்தம்திண்ணெனவே. 1.11

2912 திண்ணன்வீடு முதல்முழுதுமாய்,
எண்ணின்மீதிய னெம்பெருமான்,
மண்ணும்விண்ணுமெல்லா முடனுண்ட, நங்f
கண்ணன் கண்ணல்ல தில்லையோர்க்கண்ணே. 2.1

2913 ஏபாவம்,பரமே, யேழுலகும்,
ஈபாவஞ்செய் தருளாலளிப்பாரார்,
மாபாவம்விட அரற்குப்பிச்சைபெய்,
கோபாலகோளரி யேறன்றியே. 2.2

2914 ஏறனைப்பூவனைப் பூமகள்தன்னை,
வேறின்றிவிண்தொழத் தன்னுள்வைத்து,
மேல்தன்னைமீதிட நிமிர்ந்துமண்கொண்ட,
மால்தனில்மிக்குமோர் தேவுமுளதே. 2.3

2915 தேவுமெப் பொருளும்படைக்க,
பூவில்நான் முகனைப்படைத்த,
தேவனெம் பெருமானுக்கல்லால்,
பூவும்பூசனையும் தகுமே. 2.4

2916 தகும்சீர்த் தன்தனிமுதலினுள்ளே,
மிகும்தேவு மெப்பொருளும்படைக்க,
தகும்கோலத் தாமரைக்கண்ணனெம்மான்,
மிகும்சோதி மேலறிவார்யவரே. 2.5

2917 யவரும்யாவையு மெல்லாப்பொருளும்,
கவர்வின்றித் தன்னுளொடுங்கநின்ற,
பவர்க்கொள்ஞான வெள்ளச்சுடர்மூர்த்தி,
அவரெம் ஆழியம் பள்ளியாரே. 2.6

2918 பள்ளியாலிலை யேழுலகும்கொள்ளும்,
வள்ளல் வல்வயிற்றுப்பெருமான்,
உள்ளுளா ரறிவார் அவன்றன்,
கள்ளமாய மனக்கருத்தே. 2.7

2919 கருத்தில்தேவு மெல்லாப்பொருளும்,
வருத்தித்தமாயப் பிரானையன்றி, ஆரே
திருத்தித்திண்ணிலை மூவுலகும் தம்முள்
இருத்திக்காக்கு மியல்வினரே. 2.8

2920 காக்குமியல்வினன் கண்ணபெருமான்,
சேர்க்கைசெய்து தன்னுந்தியுள்ளே,
வாய்த்ததிசைமுக னிந்திரன்வானவர்,
ஆக்கினான் தெய்வவுலகுகளே. 2.9

2921 கள்வா எம்மையு மேழுலகும், நின்
னுள்ளேதோற்றிய இறைவா. என்று,
வெள்ளேறன்நான்முக னிந்திரன்வானவர்,
புள்ளூர்திகழல் பணிந்தேத்துவரே. 2.10

2922 ஏத்தவேழுலகுங் கொண்டகோலக்
கூத்தனை, குருகூர்ச்சடகோபன்சொல்,
வாய்த்தவாயிரத்துள் ளிவைபத்துடன்,
ஏத்தவல்லவர்க் கில்லையோர்ஊனமே. 2.11

2923 ஊனில்வாழுயிரே நல்லைபோஉன்னைப்பெற்று,
வானுளார்பெருமான் மதுசூதனென்னம்மான்,
தானும்யானுமெல்லாம் தன்னுள்ளேகலந்தொழிந்தோம்,
தேனும்பாலும்நெய்யும் கன்னலுமமுதுமொத்தே. 3.1

2924 ஒத்தார்மிக்காரை இலையாயமாமாய,
ஒத்தாயெப்பொருட்கு முயிராய், என்னைப்பெற்ற
அத்தாயாய்த்தந்தையா யறியாதனவறிவித்த,
அத்தா, நீசெய்தன அடியேனறியேனே. 3.2

2925 அறியாக்காலத்துள்ளே யடிமைக்கணன்புசெய்வித்து,
அறியாமாமாயத் தடியேனைவைத்தாயால்,
அறியாமைக்குறளாய் நிலம்மாவலிமூவடியென்று,
அறியாமைவஞ்சித்தா யெனதாவியுள்கலந்தே. 3.3

2926 எனதாவியுள்கலந்தபெரு நல்லுதவிக்கைம்மாறு,
எனதாவிதந்தொழிந்தே னினிமீள்வதென்பதுண்டே,
எனதாவியாவியும்நீ பொழிலேழுமுண்டவெந்தாய்,
எனதாவியார?fயானார?f தந்தநீகொண்டாக்கினையே. 3.4

2927 இனியார்ஞானங்களா லெடுக்கலெழாதவெந்தாய்,
கனிவார்வீட்டின்பமே யென்கடற்படாவமுதே,
தனியேன்வாழ்முதலே, பொழிலேழுமேனமொன்றாய்,
நுனியார்க்கோட்டில்வைத்தா யுன்பாதம்சேர்ந்தேனே. 3.5

2928 சேர்ந்தார்தீவினைகட் கருநஞ்சைத்திண்மதியை,
தீர்ந்தார்தம்மனத்துப் பிரியாதவருயிரை,
சோர்ந்தேபோகல்கொடாச் சுடரை அரக்கியைமூக்
கீர்ந்தாயை, அடியேனடைந்தேன் முதல்முன்னமே. 3.6

2929 முன்நல்யாழ்பயில் நூல் நரம்பின்முதிர்சுவையே,
பன்னலார்பயிலும் பரனே,பவித்திரனே,
கன்னலே,அமுதே, கார்முகிலே,என்கண்ணா,
நின்னலாலிலேன்கா ணென்னைநீகுறிக்கொள்ளே. 3.7

2930 குறிக்கொள்ஞானங்களா லெனையூழிசெய்தவமும்,
கிறிக்கொண்டிப்பிறப்பே சிலநாளிலெய்தினன்யான்,
உறிக்கொண்டவெண்ணெய்பா லொளித்துண்ணுமம்மான்பின்,
நெறிக்கொண்டநெஞ்சனாய்ப் பிறவித்துயர்க்கடிந்தே. 3.8

2931 கடிவார்தண்ணந்துழாய்க் கண்ணன்விண்ணவர்பெருமான்,
படிவான்மிறந்த பரமன்பவித்திரன்சீர்,
செடியார்நோய்கள்கெடப் படிந்துகுடைந்தாடி,
அடியேன்வாய்மடுத்துப் பருகிக்களித்தேனே. 3.9

2932 களிப்பும்கவர்வுமற்றுப் பிறப்புப்பிணிமூப்பிறப்பற்று,
ஒளிக்கொண்டசோதியுமா யுடன்கூடுவதென்றுகொலோ,
துளிக்கின்றவானிந்நிலம் சுடராழிசங்கேந்தி,
அளிக்கின்றமாயப்பிரானடியார்கள்குழாங்களையே. 3.10

2933 குழாங்கொள்பேரரக்கன் குலம்வீயமுனிந்தவனை,
குழாங்கொள்தென்குருகூர்ச் சடகோபன்தெரிந்துரைத்த,
குழாங்கொளாயிரத்து ளிவைபத்துமுடன்பாடி,
குழாங்களாயடியீருடன் கூடிநின்றாடுமினே. 3.11

2934 ஆடியாடி யகம்கரைந்து, இசை
பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி, எங்கும்
நாடிநாடி நரசிங்காவென்று,
வாடிவாடு மிவ்வாணுதலெ. 4.1

2935 வாணுதலிம்மடவரல், உம்மைக்
காணுமாசையுள் நைகின்றாள், விறல்
வாணனாயிரந்தோள்துணித்தீர், உம்மைக்
காண நீரிரக்கமிலீரே. 4.2

2936 இரக்கமனத்தோ டெரியணை,
அரக்குமெழுகு மொக்குமிவள்,
இரக்கமெழி ரிதற்கென்செய்கேன்,
அரக்கனிலங்கை செற்றீருக்கே. 4.3

2937 இலங்கைசெற்றவனே, என்னும், பின்னும்
வலங்கொள்புள்ளுயர்த்தாய் என்னும், உள்ளம்
மலங்கவெவ்வுயிர்க்கும், கண்ணீர்மிகக்
கலங்கிக்கைதொழும் நின்றிவளே. 4.4

2938 இவளிராப்பகல் வாய்வெரீஇ, தன
குவளையொண்கண்ணநீர் கொண்டாள், வண்டு
திவளும்தண்ணந் துழாய்கொடீர், என
தவளவண்ணர் தகவுகளே. 4.5

2939 தகவுடையவனே யென்னும், பின்னும்
மிகவிரும்பும்பிரான் என்னும், என
தகவுயிர்க்கமுதே, என்னும், உள்ளம்
உகவுருகி நின்றுள்ளுளே. 4.6

2940 உள்ளுளாவி யுலர்ந்துலர்ந்து, என
வள்ளலேகண்ணனேயென்னும், பின்னும்
வெள்ளநீர்க்கிடந்தாய்,என்னும், என்
கள்விதான்பட்ட வஞ்சனையே. 4.7

2941 வஞ்சனே, என்னும் கைதொழும், தன்
நெஞ்சம்வே வநெடிதுயிர்க்கும், விறல்
கஞ்சனைவஞ்சனை செய்தீர், உம்மைத்
தஞ்சமென்றிவள் பட்டனவே. 4.8

2942 பட்டபோதெழு போதறியாள், விரை
மட்டலர்தண்துழாய் என்னும், சுடர்
வட்டவாய்நுதி நேமியீர், நும
திட்டமென்கொ லிவ்வேழைக்கே. 4.9

2943 ஏழைபேதை யிராப்பகல், தன
கேழிலொண்கண்ணநீர் கொண்டாள், கிளர்
வாழ்வைவேவ விலங்கை செற்றீர், இவள்
மாழைநோக்கொன்றும் வாட்டேன்மினே. 4.10

2944 வாட்டமில்புகழ் வாமனனை, இசை
கூட்டிவண்சடகோபன் சொல், அமை
பாட்டோ ராயிரத்திப் பத்தால், அடி
குட்டலாகு மந்தாமமே. 4.11

2945 அந்தாமத்தன்புசெய் தென்னாவிசேரம்மானுக்கு,
அந்தாமவாழ்முடிசங் காழிநூலாரமுள,
செந்தாமரைத்தடங்கண் செங்கனிவாய்செங்கமலம்,
செந்தாமரையடிக்கள் செம்பொன்திருவுடம்பே. 5.1

2946 திருவுடம்புவான்சுடர் செந்தாமரைகண்கைகமலம்,
திருவிடமேமார்வ மயனிடமேகொப்பூழ்,
ஒருவிடமுமெந்தை பெருமாற்கரனேயோ,
ஒருவிடமொன்றின்றி யென்னுள்கலந்தானுக்கே. 5.2

2947 என்னுள்கலந்தவன் செங்கனிவாய்செங்கமலம்,
மின்னும்சுடர்மலைக்குக் கண்பாதம்கைகமலம்,
மன்னுமுழுவேழுலகும் வயிற்றினுள,
தன்னுள்கலவாத தெப்பொருளும்தானிலையே. 5.3

2948 எப்பொருளும்தானாய் மரகதக்குன்றமொக்கும்,
அப்பொழுதைத்தாமரைப்பூக் கண்பாதம்கைகமலம்,
எப்பொழுதும்நாள்திங்க ளாண்டூழியூழிதொறும்,
அப்பொழுதைக்கப்பொழு தென்னாராவமுதமே. 5.4

2949 ஆராவமுதமா யல்லாவியுள்கலந்த,
காரார்க்கருமுகில்போ லென்னம்மான்கண்ணனுக்கு,
நேராவாய்செம்பவளம் கண்பாதம்கைகமலம்,
பேராரநீண்முடிநாண் பின்னுமிழைபலவே. 5.5

2950 பலபலவேயாபரணம் பேரும்பலபலவே,
பலபலவேசோதிவடிவு பண்பெண்ணில்,
பலபலகண்டுண்டு கேட்டுற்றுமோந்தின்பம்,
பலபலவேஞானமும் பாம்பணைமேலாற்கேயோ. 5.6

2951 பாம்பணைமேல்பாற்கடலுள் பள்ளியமர்ந்ததுவும்,
காம்பணைதோள்பின்னைக்கா எறுடனேழ்செற்றதுவும்,
தேம்பணையசோலை மராமரமேழெய்ததுவும்,
பூம்பிணையதண்துழாய்ப் பொன்முடியம்போரேறே. 5.7

2952 பொன்முடியம்போரேற்றை யெம்மானைநால்தடந்தோள்,
தன்முடிவொன்றில்லாத தண்டுழாய்மாலையனை,
என்முடிவுகாணாதே யென்னுள்கலந்தானை,
சொல்முடிவுகாணேன்நான் சொல்லுவதென்சொல்லீரே. 5.8

2953 சொல்லீரென்னம்மானை யென்னாவியாவிதனை,
எல்லையில்சீரென் கருமாணிக்கச்சுடரை,
நல்லவமுதம்பெற்றற்கரிய வீடுமாய்,
அல்லிமலர்விரையொத் தாணல்லன்பெண்ணல்லனே. 5.9

2954 ஆணல்லன்பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்,
காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்,
பேணுங்கால்பேணுமுருவாகும் அல்லனுமாம்,
கோணை பெரிதுடைத்தெம்மானைக்கூறுதலே. 5.10

2955 கூறுதலொன்றாராக் குடக்கூத்தவம்மானை,
கூறுதலேமேவிக் குருகூர்ச்சடகோபன்,
கூறினவந்தாதி யோராயிரத்துளிப்பத்தும்,
கூறுதல்வல்லாருளரேல் கூடுவர்வைகுந்தமே. 5.11

2956 வைகுந்தாமணிவண்ணனே, என்பொல்லாத்திருக்குறளா, என்னுள்மன்னி,
வைகும்வைகல்தோறும் அமுதாயவானேறே,
செய்குந்தாவருந்தீமையுன்னடியார்க்குத்தீர்த்தசுரர்க்குத்தீமைகள்
செய்குந்தா, உன்னைநான் பிடித்தேன் கொள்சிக்கெனவே. 6.1

2957 சிக்கெனச்சிறுதோரிடமும்புறப்படாத்தன்னுள்ளே, உலகுகள்
ஒக்கவேவிழுங்கிப் புகுந்தான்புகுந்ததற்பின்,
மிக்கஞானவெள்ளச்சுடர்விளக்காய்த் துளக்கற்றமுதமாய், எங்கும்
பக்கநோக்கறியானென் பைந்தாமரைக்கண்ணனே. 6.2

2958 தாமரைக்கண்ணனைவிண்ணோர் பரவும்தலைமகனை, துழாய்விரைப்
பூமருவுகண்ணி யெம்பிரானைப்பொன்மலையை,
நாமருவிநன்கேத்தியுள்ளிவணங்கிநாம்மகிழ்ந்தாட, நாவலர்
பாமருவிநிற்கத்தந்த பான்மையேவள்ளலே. 6.3

2959 வள்ளலே,மதுசூதனா, என்மரகதமலையே, உனைநினைந்து,
தெள்கல்தந்த எந்தாய் உ<ன்னையெங்ஙனம்விடுகேன்,
வெள்ளமேபுரைநின்புகழ்குடைந்தாடிப்பாடிக்களித்துகந்துகந்து
உள்ளநோய்களேல்லாம் துரந்துய்ந்து போந்திருந்தே. 6.4

2960 உய்ந்துபோந்தென்னுலப்பிலாதவெந்தீவினைகளைநாசஞ்செய்துஉன்
தந்தமிலடிமையடைந்தேன் விடுவேனோ,
ஐந்துபைந்தலையாடரவணைமேவிப்பாற்கடல்யோகநித்திரை,
சிந்தைசெய்தவெந்தாய் உ<ன்னைச்சிந்தைசெய்துசெய்தே. 6.5

2961 உன்னைச்சிந்தைசெய்துசெய்துன்நெடுமாமொழியிசைபாடியாடிஎன்
முன்னைத்தீவினைகள்முழுவேரரிந்தனன்யான்,
உன்னைச்சிந்தையினாலிகழ்ந்த இரணியன் அகல்மார்வங்கீண்ட,என்
முன்னைகோளரியே, முடியாததென்னெனக்கே?. 6.6

2962 முடியாததென்னெனக்கேலினி முழுவேழுலகுமுண்டான்,உகந்துவந்
தடியேனுள்புகுந்தான் அகல்வானும் அல்லனினி,
செடியார்நோய்களெல்லாம்துரந்தெமர்க்கீழ்மேலெழுபிறப்பும்,
விடியாவெந்நரகத்தென்றும் சேர்தல்மாறினரே. 6.7

2963 மாறிமாறிப்பலபிறப்பும்பிறந் தடியையடைந்துள்ளந்தேறி
ஈறிலின்பத்திருவெள்ளம் யான்மூழ்கினன்,
பாறிப்பாறியசுரர்தம்பல்குழாங்கள்நீறெழ, பாய்பறவையொன்
றேறிவீற்றிருந்தாய் உ<ன்னை யென்னுள்நீக்கேலெந்தாய். 6.8

2964 எந்தாய்தண்திருவேங்கடத்துள் நின்றாய்இலங்கைசெற்றாய், மராமரம்
பைந்தாளேழுருவவொரு வாளிகோத்தவில்லா,
கொந்தார்தண்ணந்துழாயினாய், அமுதே,உன்னையென்னுள்ளேகுழைத்தவெf
மைந்தா, வானேறே, இனியெங்குப்போகின்றதே? 6.9

2965 போகின்றகாலங்கள்போயகாலங்கள்போகுகாலங்கள், தாய்தந்தையுயி
ராகின்றாய் உ<ன்னைநானடைந்தேன்விடுவேனோ,
பாகின்றதொல்புகழ்மூவுலகுக்கும் நாதனே. பரமா, தண்வேங்கட
மேகின்றாய்தண்டுழாய் விரைநாறுகண்ணியனே. 6.10

2966 கண்ணித்தண்ணந்துழாய்முடிக் கமலத்தடம்பெருங்
கண்ணனை, புகழ் நண்ணித்தென்குருகூர்ச்சடகோபன்மாறன்சொன்ன,
எண்ணில்சோர்விலந்தாதியாயிரத் துள்ளிவையுமோர்பத்திசையொடும்,
பண்ணில்பாடவல்லாரவர் கேசவன்தமரே. 6.11

2967 கேசவன்தமர்க்கீழ்மே லெமரேழெழுபிறப்பும்,
மாசதிரிதுபெற்று நம்முடைவாழ்வுவாய்க்கின்றவா,
ஈசனென்கருமாணிக்கமென் செங்கோலக்கண்ணன்விண்ணோர்
நாயகன், எம்பிரானெம்மான்நாராயணனாலே. 7.1

2968 நாரணன்முழுவேழுலகுக்கும் நாதன்வேதமயன்,
காரணம்கிரிசை கருமமிவைமுதல்வனெந்தை,
சீரணங்கமரர்பிறர் பலரும்தொழுதேத்தநின்று,
வாரணத்தைமருப்பொசித்த பிரானென்மாதவனே. 7.2

2969 மாதவனென்றதேகொண் டென்னையினியிப்பால்பட்டது,
யாதவங்களும்சேர்க்கொடேனென் றென்னுள்புகுந்திருந்து,
தீதவம்கெடுக்குமமுதம் செந்தாமரைக்கட்குன்றம்,
கோதவமிலென்கன்னற்கட்டி யெம்மானென்கோவிந்தனே. 7.3

2970 கோவிந்தன்குடக்கூத்தன்கோவலனென்றென்றேகுனித்து
தேவும்தன்னையும்பாடியாடத்திருத்தி, என்னைக்கொண் டென்
பாவந்தன்னையும்பாறக்கைத் தெமரேழெழுபிறப்பும்,
மேவும்தன்மையமாக்கினான் வல்லனெம்பிரான்விட்டுவே. 7.4

2971 விட்டிலங்குசெஞ்சோதித் தாமரைபாதம்கைகள்கண்கள்,
விட்டிலங்குகருஞ்சுடர் மலையேதிருவுடம்பு,
விட்டிலங்குமதியம்சீர் சங்குசக்கரம்பரிதி,
விட்டிலங்குமுடியம்மான் மதுசூதனன்தனக்கே. 7.5

2972 மதுசூதனையன்றிமற்றிலேனென் றெத்தாலும்கருமமின்றி,
துதிசூழ்ந்தபாடல்கள் பாடியாட நின்றூழியூழிதொறும்,
எதிர்சூழல்புக்கெனைத்தோர்பிறப்புமெனக்கேயருள்கள்செய்ய,
விதிசூழ்ந்ததாலெனக்கேலம்மான் திரிவிக்கிரமனையே. 7.6

2973 திரிவிக்கிரமன்செந்தாமரைக்கணெம்மானேன்செங்கனிவாய்
உருவில்பொலிந்தவெள்ளைப்பளிங்குநிறத்தனனென்றென்று, உள்ளிப்
பரவிப்பணிந்து பல்லூழியூழிநின்பாதபங்கயமே,
மருவித்தொழும்மனமேதந்தாய் வல்லைகாணென்வாமனனே. 7.7

2974 வாமனனென்மரகதவண்ணன் தாமரைக்கண்ணினன்
காமனைப்பயந்தாய், என்றென்றுன்கழல்பாடியேபணிந்து,
தூமனத்தனனாய்ப் பிறவித்துழதிநீங்க, என்னைத்
தீமனங்கெடுத்தா யுனக்கென்செய்கேனென்சிரீ தரனே. 7.8

2975 சிரீஇதரன்செய்யதாமரைக்கண்ணனென்றென்றிராப்பகல்வாய்
வெரீஇ, அலமந்துகண்கள்நீர்மல்கி வெவ்வுயிர்த்துயிர்த்து,
மரீஇயதீவினைமாளவின்பம்வளர வைகல்வைகல்
இரீஇ, உன்னையென்னுள்வைத்தனை யென்னிருடீகேசனே. 7.9

2976 இருடீகேசனெம்பிரா னிலங்கையரக்கர்க்குலம்,
முருடுதீர்த்தபிரானெம்மா னமரர்பெம்மானென்றென்று,
தெருடியாகில்நெஞ்சே,வணங்கு திண்ணமறியறிந்து,
மருடியேலும்விடேல்கண்டாய் நம்பிபற்பநாபனையே. 7.10

2977 பற்பநாபனுயர்வறவுயரும் பெருந்திறலோன்,
எற்பரனென்னையாக்கிக் கொண்டெனக்கேதன்னைத்தந்த
கற்பகம், என்னமுதம் கார்முகில்போலும்வேங்கடநல்
வெற்பன், விசும்போர்பிரா னெந்தைதாமோதரனே. 7.11

2978 தாமோதரனைத்தனிமுதல்வனை ஞாலமுண்டவனை,
ஆமோதரமறிய வொருவர்க்கென்றெதொழுமவர்கள்,
தாமோதரனுருவாகிய சிவற்கும்திசைமுகற்கும்,
ஆமோதரமறிய எம்மானையென்னாழிவண்ணனையே. 7.12

2979 வண்ணமாமணிச்சோதியை யமரர்தலைமகனை,
கண்ணனைநெடுமாலைத் தென்குருகூர்ச்சடகோபன்,
பண்ணியதமிழ்மாலை யாயிரத்துள்ளிவைபன்னிரண்டும்,
பண்ணில்பன்னிருநாமப் பாட்டண்ணல்தாளணைவிக்குமே. 7.13

2980 அணைவதரவணைமேல் பூம்பாவையாகம்
புணர்வது, இருவரவர்முதலும்தானே,
இணைவனாமெப்பொருட்கும் வீடுமுதலாம்,
புணைவன் பிறவிக்கடல்நீந்துவார்க்கே. 8.1

2981 நீந்தும்துயர்ப்பிறவி யுட்படமற்றெவ்வெவையும்,
நீந்தும்துயரில்லா வீடுமுதலாம்,
பூந்தண்புனல்பொய்கை யானை இடர்க்கடிந்த,
பூந்தண்துழா யென்தனிநாயகன்புணர்ப்பே. 8.2

2982 புணர்க்குமயனா மழிக்குமரனாம்,
புணர்த்ததன்னுந்தியோ டாகத்துமன்னி,
புணர்ததிருவாகித் தன்மார்வில்தான்சேர்,
புணர்ப்பன்பெரும்புணர்ப் பெங்கும்புலனே. 8.3

2983 புலனைந்துமேயும் பொறியைந்துநீக்கி,
நலமந்தமில்லதோர் நாடுபுகுவீர்,
அலமந்துவீய வசுரரைச்செற்றான்,
பலமுந்துசீரில் படிமினோவாதே. 8.4

2984 ஒவாத்துயர்ப்பிறவி யுட்படமற்றெவ்வெவையும்,
மூவாத்தனிமுதலாய் மூவுலகும்காவலோன்,
மாவாகியாமையாய் மீனாகிமானிடமாம்,
தேவாதிதேவபெருமா னென்தீர்த்தனே. 8.5

2985 தீர்த்தனுலகளந்த சேவடிமேல்பூந்தாமம்,
சேர்த்தியவையே சிவன்முடிமேல்தான்கண்டு,
பார்த்தன்தெளிந்தொழிந்த பைந்துழாயான்பெருமை,
பேர்த்துமொருவரால் பேசக்கிடந்ததே? 8.6

2986 கிடந்திருந்துநின்றளந்து கேழலாய்க்கீழ்புக்
கிடந்திடும், தன்னுள்கரக்குமுமிழும்,
தடம்பெருந்தோளாரத்தழுவும் பாரென்னும்
மடந்தையை, மால்செய்கின்றமாலார்க்காண்பாரே. 8.7

2987 காண்பாராரெம்மீசன் கண்ணனையென்காணுமாறு,
ஊண்பேசிலெல்லாவுலகுமோர்துற்றாற்றா,
சேண்பாலவீடோ வுயிரோமற்றெப்பொருட்கும்,
ஏண்பாலும்சோரான் பரந்துளனாமெங்குமே. 8.8

2988 எங்கும்முளன்கண்ண னென்றமகனைக்காய்ந்து,
இங்கில்லையால் என் றிரணியன் தூண்புடைப்ப,
அங்கப்பொழுதே அவன்வீயத்தோன்றிய, என்
சிங்கப்பிரான்பெருமை யாராயும்சீர்மைத்தே. 8.9

2989 சீர்மைகொள்வீடு சுவர்க்கநரகீறா,
ஈர்மைகொள்தேவர்நடுவா மற்றெப்பொருட்கும்,
வேர்முதலாய்வித்தாய்ப் பரந்துதனிநின்ற,
கார்முகில்போல்வண்ணனென் கண்ணனைநான்கண்டேனே. 8.10

2990 கண்டலங்கள்செய்ய கருமேனியம்மானை,
வண்டலம்பும்சோலை வழுதிவளநாடன்,
பண்டலையில்சொன்னதமி ழாயிரத்திப்பத்தும்வல்லார்,
விண்டலையில்வீற்றிருந் தாள்வரெம்மாவீடே. 8.11

2991 எம்மாவீட்டுத் திறமும்செப்பம், நின்
செம்மாபாதபற்புத் தலைசேர்த்தொல்லை,
கைம்மாதுன்பம் கடிந்தபிரானே,
அம்மாவடியென் வேண்டுவதீதே. 9.1

2992 இதேயானுன்னைக் கொள்வதெஞ்ஞான்றும், என்
மைதோய்சோதி மணிவண்ணவெந்தாய்,
எய்தாநின்கழல் யானெய்த, ஞானக்
கைதா காலக்கழிவுசெய்யேலே. 9.2

2993 செய்யேல்தீவினையென் றருள்செய்யும், என்
கையார்ச்சக்கரக் கண்ணபிரானே,
ஐயார்க்கண்டமடைக்கிலும் நின்கழல்
எய்யாதேத்த, அருள்செய்யெனக்கே. 9.3

2994 எனக்கேயாட்செய் யெக்காலத்துமென்று, என்
மனக்கேவந் திடைவீடின்றிமன்னி,
தனக்கேயாக வெனைக்கொள்ளுமீதே,
எனக்கேகண்ணனை யான்கொள்சிறப்பே. 9.4

2995 சிறப்பில்வீடு சுவர்க்கம்நரகம்,
இறப்பிலெய்துகவெய்தற்க, யானும்
பிறப்பில் பல்பிறவிப்பெருமானை,
மறப்பொன்றின்றி யென்றும்மகிழ்வேனே. 9.5

2996 மகிழ்கொள்தெய்வ முலோகம் அலோகம்,
மகிழ்கொள்சோதி மலர்ந்தவம்மானே,
மகிழ்கொள்சிந்தை சொல்செய்கைகொண்டு, என்றும்
மகிழ்வுற்றுன்னை வணங்கவாராயே. 9.6

2997 வாராயுன் திருப்பாதமலர்க்கீழ்,
பேராதேயான் வந்தடையும்படி
தாராதாய், உன்னையென்னுள்வைப்பிலென்றும்
ஆராதாய், எனக்கென்றுமெக்காலே. 9.7

2998 எக்காலத்தெந்தையா யென்னுள்மன்னில், மற்
றெக்காலத்திலும் யாதொன்றும்வேண்டேன்,
மிக்கார்வேத விமலர்விழுங்கும், என்
அக்காரக்கனியே, உன்னையானே. 9.8

2999 யானேயென்னை அறியகிலாதே,
யானேயென்தனதே யென்றிருந்தேன்,
யானேநீயென் னுடைமையும்நீயே,
வானேயேத்து மெம்வானவரேறே. 9.9

3000 ஏறேலேழும்வென் றேர்க்கொளிலங்கையை,
நீறேசெய்த நெடுஞ்சுடர்ச்சோதி,
தேறேலென்னையுன் பொன்னடிச்சேர்த்தொல்லை,
வேறேபோக எஞ்ஞான்றும்விடலே. 9.10

3001 விடலில்சக்கரத் தண்ணலை, மேவல்
விடலில்வண்குருகூர்ச் சடகோபன்சொல்,
கெடலிலாயிரத்துள் ளிவைபத்தும்,
கெடலில்வீடுசெய்யும் கிளர்வார்க்கே. 9.11

3002 கிளரொளியிளமை கெடுவதன்முன்னம்,
வளரொளிமாயோன் மருவியகோயில்,
வளரிளம்பொழில்சூழ் மாலிருஞ்சோலை,
தளர்விலராகில் சார்வதுசதிரே. 10.1

3003 சதிரிளமடவார் தாழ்ச்சியை மதியாது,
அதிர்க்குரல்சங்கத் தழகர்தம்கோயில்,
மதிதவழ்குடுமி மாலிருஞ்சோலை,
பதியதுவேத்தி யெழுவதுபயனே. 10.2

3004 பயனல்லசெய்து பயனில்லைநெஞ்சே,
புயல்மழைவண்ணர் புரிந்துறைகோயில்,
மயல்மிகுபொழில்சூழ் மாலிருஞ்சோலை,
அயன்மலையடைவததுகருமமே. 10.3

3005 கருமவன்பாசம் கழித்துழன்றுய்யவே,
பெருமலையெடுத்தான் பீடுறைகோயில்,
வருமழைதவழும் மாலிருஞ்சோலை,
திருமலையதுவே யடைவதுதிறமே. 10.4

3006 திறமுடைவலத்தால் தீவினைபெருக்காது,
அறமுயல் ஆழிப் படையவன்கோயில்,
மறுவில்வண்சுனைசூழ் மாலிருஞ்சோலை,
புறமலைசாரப் போவதுகிறியே. 10.5

3007 கிறியெனநினைமின் கீழ்மைசெய்யாதே,
உறியமர்வெண்ணெ யுண்டவன் கோயில்,
மறியொடுபிணைசேர் மாலிருஞ்சோலை,
நெறிபட அதுவே நினைவதுநலமே. 10.6

3008 நலமெனநினைமின் நரகழுந்தாதே,
நிலமுனமிடந்தான் நீடுறைகோயில்,
மலமறுமதிசேர் மாலிருஞ்சோலை,
வலமுறையெய்தி மருவுதல்வலமே. 10.7

3009 வலம்செய்துவைகல் வலங்கழியாதே,
வலம்செய்யும்ஆய மாயவன் கோயில்,
வலம்செய்யும்வானோர் மாலிருஞ்சோலை,
வலம்செய்துநாளும் மருவுதல்வழக்கே. 10.8

3010 வழக்கெனநினைமின் வல்வினைமூழ்காது,
அழக்கொடியட்டா னமர்பெருங்கோயில்,
மழக்களிற்றினஞ்சேர் மாலிருஞ்சோலை,
தொழுக்கருதுவதே துணிவதுசூதே. 10.9

3011 சூதென்றுகளவும் சூதும்செய்யாதே,
வேதமுன்விரித்தான் விரும்பியகோயில்,
மாதுறுமயில்சேர் மாலிருஞ்சோலை,
போதவிழ்மலையே புகுவதுபொருளே. 10.10

3012 பொருளேன்றிவ்வுலகம் படைத்தவன்புகழ்மேல்,
மருளில்வண்குருகூர் வண்சடகோபன்,
தெருள்கொள்ளச்சொன்ன வோராயிரத்துளிப்பத்து,
அருளுடையவன்தா ளணைவிக்கும்முடித்தே. 10.11